வடக்கில் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சனை தீர்க்கப்பட வேண்டுமென யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனார்ட் ஞானப்பிரகாசம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் எடுத்துரைத்தார்.
வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வடக்கில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ள நிலையில், இன்றைய தினம் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசத்தினை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
ஆயருடனான சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான புத்திக பத்திரண, எரான் விக்ரமரட்ன ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்
குறித்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ் மறைமாவட்ட ஆயர், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் இன்று என்னை சந்தித்து கலந்துரையாடினார்
அவர் தன்னாலான முயற்சியினை மேற்கொண்டு அபிவிருத்தி வேலைகளை செய்து வருகின்றார் ஏற்கனவே எதிர்கட்சியில் இருந்தவர்கள் இவ்வாறு அபிவிருத்தி வேலைகள் செய்யவில்லை. ஆகவே அவருடைய அந்த பணியினை பாராட்டவேண்டும் எத்தனையோ வைத்தியசாலைகளுக்கு சிறுநீரக நோய்க்குரிய இயந்திர தொகுதிகளை வழங்கியுள்ளார். அத்தோடு பாடசாலைகளுக்கும் உதவிகள் வழங்கி வருகின்றார் சுகாதாரமும் கல்வியும் அவருடைய முக்கிய குறிக்கோளாக காணப்படுகின்றது.
அவ்வாறு ஈடுபடும் அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் எங்களுடைய பிரச் சினைகள் அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.
நான் கல்வி மீன்பிடி விவசாயம் என்ற மூன்று விடயங்களை குறிப்பாக குறிப்பிட்டேன்.அதாவது இந்த மூன்று துறைகளையும் வடக்கில் அபிவிருத்தி செய்ய வேண்டும். அத்தோடு இந்த இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சனை ஒரு பெரும் பிரச்சினையாக காணப்படுகின்றது. அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியபோது அரசாங்கத்தில் இருப்பவர்கள்தான் அதனை செய்ய முடியும் என தெரிவித்தார் என்றார்.
Post a Comment