காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உத்தரதேவி ரயில் வத்தள வனவாசல பகுதியில் ரயில்வே கடவையூடாக கடந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் மதியம் 12.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது
இச்சம்பவத்தில் போது கார்தீப்பற்றி எரிந்ததுடன் ரயின் முன்பகுதியிலும் சேதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் காரில் பயணித்த ஒருவர் பலியாகியுள்ளார்.
சம்பவத்தின் போது ரயில் காருடன் மோதியபோது சுமாரை 200 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றுள்ளதால் தீப்பிடித்துள்ளது. அப்பகுதி மக்கள் இணைந்து தீயினை அணைத்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும், இந்த சம்பவத்தால் ரயில் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment