குறைந்த கடன் மதிப்பீட்டிற்கு அமைய அரசாங்கம் பல்வேறு வழிகளில் கடன்களைப் பெற்றுக் கொள்வதன் மூலம் நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
நாட்டின் நிதிப் பிரச்சினைகள் 2019 டிசம்பரில் ஆரம்பித்தன. கொவிட்-19 தொற்று நோயால் அல்ல என பாராளுமன்ற உறுப்பினரான கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
6.5 பில்லியன் அரசாங்க வருமானத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நிதி தரமதிப்பீட்டு நிறுவனங்கள் இலங்கையின் கடன் தரத்தை குறைத்துள்ளமையால் அனைத்து அரச நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.
பிரச்சினைகள் தீர்க்கப்படாமையால் விடயங்கள் சிக்கலாகிவிட்டன என்றார்.
தற்போதைய நிர்வாகம் முறையான வழிகளில் கடன்களைப் பெறுவதற்குப் பதிலாக நாடுகளிடம் இருந்து கடன்களைப் பெறுவதற்காக இலங்கையின் இறையாண்மையை ஏலம் விடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment