எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனிக் கூட்டணியாக போட்டியிட தீர்மானம்! - Yarl Voice எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனிக் கூட்டணியாக போட்டியிட தீர்மானம்! - Yarl Voice

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனிக் கூட்டணியாக போட்டியிட தீர்மானம்!



எதிர்வரும் தேர்தலில் தனிக் கூட்டணியாக போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானத்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச, அரசாங்கம் தொடர்ந்தும் 5000 ரூபாவை அச்சிட்டு விநியோகித்தாலும் சனத்தொகையில் 7% ஆனவர்களே அரச துறை ஊழியர்களாக உள்ளனர்.

ரூ.5,000 கொடுப்பனவு ஏனைய மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்றும், அதிகரித்து வரும் பொருட்களின் விலையால் மக்கள் எப்படி வாழ முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
650,000 பேர் இரவு உணவை உட்கொள்வதில்லை என சுகாதார நிபுணர் ஒருவர் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சூழ்நிலையில் பொதுமக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்வை எதிர்பார்த்து வருவதாகவும் கட்சி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post