கட்டுவனில் மக்களின் நிலத்தில் அமைக்கும் வீதி உடன் நிறுத்தப்படாவிட்டால் அந்த இடத்தில் படைகளிற்கு எதிராக போராடும் சூழல் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் நிலம் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி நாடாளுமன்றில் கூறுகின்றார். மறுபக்கமோ கட்டுவன் மயிலிட்டி வீதியில் மக்களின் நிலத்தை அபகரித்து படையினர் வீதி அமைக்கின்றனர். இந்த நாட்டில் என்ன நடக்கின்றது என்பது ஜனாதிபதிக்கும் புரியவில்லை.
இந்த நாட்டின் அரசியல் பிரச்சனை தொடர்பில் வாயே திறவாத ஜனாதிபதி பசப்பிற்காக மக்களின் நிலங்கள் விடுவிக்கப்படும் என்றார் .
ஆனால் அதனைக்கூட இந்த ஜனாதிபதி செய்ய மாட்டார் என்பதனை அன்றைய தினமே கட்டுவன் மயிலிட்டி வீதியில் வெறும் 400 மீற்றர் நீளமும் 26 மீற்றர் அகலத்தை உடைய நிலத்தை விடமாட்டோம் என படையினர் அடத்தாக வீதி அமைக்கின்றனர்.
அவ்வாறானால் இந்த ஜனாதிபதியிடம் எதனை எதிர்பார்க்க முடியும். எமது பகுதியிலே இராணுவம் எவரது சொல்லையும் மதிப்பதில்லை என்பது எமக்கு எப்போதே தெரிந த விடயம். தற்போது ஜனாதிபதியின் கூற்றையும் மதிக்காத ஒரு இராணுவம் இருப்பதாகவே தெரிகின்றது.
ஆக்கிரமித்து வைத்திருக்கும் நிலங்கள் விடுவிக்கப்படும் என மக்கள் காத்திருக்க படையிர் அங்கே தென்னந் தோட்டமும் வீதிகளையும் அமைப்பதோடு தமக்கான உல்லாச விடுதிகளையும் அமைப்பதே இன்று தமிழர் பிரதேசத்தில் இடம்பெறுகின்றது என்றார்.
Post a Comment