யாழ்ப்பாணம் - கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கரணவாய் பகுதியில் நேற்று ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக 19 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
கரணவாய் பகுதியின் ஜே348 மற்றும் ஜே350 பிரிவுகளிலேயே இந்த சேத விவரங்கள் பதிவாகியுள்ள அதே வேளை 15 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக ரி.என்.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் திடீரென பெய்த மழை காரணமாக 119.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளமை குரிப்பிடத்தக்கது.
Post a Comment