அம்புலு திரைப்படத்தின் இசை நாளையதினம் யாழில் வெளியீடு - Yarl Voice அம்புலு திரைப்படத்தின் இசை நாளையதினம் யாழில் வெளியீடு - Yarl Voice

அம்புலு திரைப்படத்தின் இசை நாளையதினம் யாழில் வெளியீடு



"அம்புலு" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளைய தினம்(8) யாழில் இடம்பெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே படக்குழு இதனை தெரிவித்தது.

அஜீபன்ராஜின் தயாரிப்பிலும் 
சுதர்ஷன் ரட்ணத்தினுடைய இயக்கத்திலும் உருவாகியுள்ள அம்புலு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை 3 மணிக்கு
யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் நடைபெறவுள்ளது.

ஆர்.வின்.பிரசாத்தின் இசையில் உருவாகியுள்ள பாடல்கள்  படத்துக்கு பலமாக அமையும் என்றும் இசை வெளியீட்டு விழாவுக்கு அனைவரையும் வருமாறும் படக்குழு அறிவித்துள்ளது

0/Post a Comment/Comments

Previous Post Next Post