கர்ப்பிணித் தாய்மார்களிடையே கொவிட்-19 தொற்று அதிகரிப்பு -வைத்தியர் சித்திரமாலி டி சில்வா - Yarl Voice கர்ப்பிணித் தாய்மார்களிடையே கொவிட்-19 தொற்று அதிகரிப்பு -வைத்தியர் சித்திரமாலி டி சில்வா - Yarl Voice

கர்ப்பிணித் தாய்மார்களிடையே கொவிட்-19 தொற்று அதிகரிப்பு -வைத்தியர் சித்திரமாலி டி சில்வா



அண்மைக் காலமாக கர்ப்பிணித் தாய்மார்களிடையே கொவிட்-19 தொற்றானது அதிகரித்துள்ளதாக குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.

சுமார் 500 கர்ப்பிணித் தாய்மார்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்காக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக பணியகத்தின் பணிப்பாளரான வைத்தியர் சித்திரமாலி டி சில்வா தெரிவித்தார்.
வைரஸ் தொற்றினால் ஏற்படும் சிக்கல்களைக் குறைப்பதற்காக பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தினார்.

கர்ப்பிணித் தாய்மார்கள் இரண்டாவது தடுப்பூசி டோஸைப் பெற்று மூன்று மாதங்களுக்குப் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெறலாம் என சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கர்ப்பிணித் தாய்மார்களிடையே தடுப்பூசியைப் பெறுவதில் தயக்கம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒமிக்ரோன் பிறழ்வானது வேகமாகப் பரவி வருவதால், கர்ப்பிணித் தாய்மார்கள் அனைவரும் தங்கள் கிளினிக் கிற்குச் சென்று உடனடியாக பூஸ்டர் டோஸை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தினார்.

தடுப்பூசிகள் மூலம் கர்ப்பிணித் தாய்மார்களிடையே கொவிட் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post