தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்களுடன் சமரசத்தை ஏற்படுத்தும் நோக்கில் தொலைபேசி ஊடாக ஆளுநருடன் ஒருவருக்கு உரையாடும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தருவதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விடுத்த கோரிக்கையை மீனவர்கள் நிராகரித்துள்ளனர்.
போராட்டம் நடைபெற்ற பகுதிக்குச் சென்ற பொலிஸ் அதிகாரி,
வடக்கு ஆளுநர் கொழும்பில் உள்ளதாகவும் அவருடன் மீனப் பிரதிநிதிகளில் யாராவது ஒருவர் உரையாட விரும்பினால் தொலைபேசியில் உரையாட வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாகவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இருந்தபோதிலும் காலாகாலமாக இவ்வாறான வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றனவே தவிர எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று தெரிவித்து குறித்த கோரிக்கையை மீனவப் பிரதிநிதிகள் நிராகரித்துள்ளனர்.
https://thinakkural.lk/article/163816
Post a Comment