மகாவம்சம் கூறும் தமிழரின் சுயநிர்ணயம் வீரசேகரவுக்கு தெரியாதா ?
என வடக்கு மாகாணசபை முன்னாளா உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னதாக ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் புலிகள் கோரிய சுயநிர்ணய உரிமையை சுமந்திரனும் கோருகிறார் என வீரசேகர குறிப்பிட்டிருந்தார். இதனை வாசிக்கும் போது வேடிக்கையாக இருந்தது
முதலாவது சிங்கள குடியேற்றம் இலங்கையில் கி மு 6 நூற்றாண்டு விஐயன் தலைமையில் அரங்கேறும் போது தமிழர்கள் சுயநிர்ணயத்துடன் சுயாட்சி நடாத்தியதாக சிங்கள மக்கள் நம்பும் மகாவம்சத்தில் மகாநாம தேரர் குறிப்பிடப்பட்ட விடையம் அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு இதுவரை தெரியாதா?
இலங்கைத் தீவுக்கு சொந்தமான தமிழர்கள் இறைமையுடன் ஆண்ட இனம் என்ற வரலாற்றை மறைத்து பௌத்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்கள் மீது தொடரும் ஆக்கிரமிப்பின் ஒரு வகை வெளிப்பாடே வீரசேகரவின் ஊடக அறிக்கை.
தமிழர்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி ஐரோப்பியரின் இலங்கைமீதான ஆக்கிரமிப்புடன் பறிக்கப்பட்டது குறிப்பாக 1833 ஆண்டு கோல்புறுக் அரசியல் அமைப்பின் மூலம் ஒற்றையாட்சிக்குள் நாடு கொண்டுவரப்பட்டதால் தமிழர்கள் சுயாட்சியை இழந்தனர்.
பின்னர் 1948 ஆண்டு சுதந்திரம் என்ற பெயரில் சிங்களவர்களுக்கு உண்மையான சுதந்திரத்தையும் தமிழர்கள் உட்பட ஏனைய இனங்களுக்கு அவர்களின் இருப்பை ஆக்கிரமிக்கும் சிங்கள ஆட்சியாளர்களையும் கொடுத்துச் சென்றனர் பிரித்தானியர். அன்றில் இருந்து இன்று வரை தமிழ் மக்கள் மறுக்கப்பட்ட தங்களது சுயநிர்ணய உரிமைக்காக தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.
1952 இல் இருந்து 1972 வரை 90 சதவீத தமிழ் மக்கள் சமஷ்டி அடிப்படையிலான சுயாட்சித் தீர்வுக்காகவே ஐனநாயக முறையில் தேர்தல்களில் வாக்களித்தனர்
இ தன் பின்னர் 1977 தேர்தலில் ஒரு படி மேலே சென்று தனிநாட்டிற்கான கோரிக்கையை முன் வைத்து அதற்கான சர்வசன வாக்கெடுப்பு என்ற வகையில் வடகிழக்கில் 19 தொகுதிகளில் 18 தொகுதிகளை அன்றைய தமிழர் கூட்டணி வென்றது.
இது மிகப்பெரிய ஐனநாயக வெற்றி ஆனால் சிங்கள ஆட்சியாளர் தமிழர்களின் அபிலாசைகளை நியாய பூர்வமாக தீர்க்க முன் வரவில்லை இதனால் உருவாகியதே ஆயுதப் போராட்டம் இயக்கங்கள்.
ஆகவே விடுதலைப் புலிகள் தங்களது கோரிக்கையாக சுயநிர்ணய உரிமையை கோரவில்லை தமிழ் மக்களின் ஐனநாயக ரீதியாக தேர்தல் மூலம் கேட்கப்பட்ட சுயநிர்ணய உரிமையை பௌத்த சிங்கள பேரினவாத ஆட்சியாளர் அங்கிகரிக்க மறுத்தமையால் அதனைப் பெற்றுக் கொடுக்கவே ஆயுதப் போராட்டம் நடாத்தினர்.
எனவே யுத்தம் மௌனிக்கப்பட்டு 13 ஆண்டுகளாகியும் மீண்டும் தமிழ் மக்கள் பெரும்பாண்மையாக சுயநிர்ணய உரிமைக்காகவே பல அவலங்களுக்கு மத்தியில் தொடர்ந்து வாக்களித்து வருகின்றனர். எனவே தமிழர்கள் இந்த நாட்டின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய இறைமையுள்ள இனம் என்பதை வரலாற்றில் இருந்து மறைக்க முடியாது.
Post a Comment