அரசாங்க தகவல் திணைக்களத்தின் அரசாங்க வெளியீட்டு பணியகம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் காலை 10 மணியளவில் வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் திறந்து வைக்கப்பட்டது.
அரசாங்க வெளியீட்டு பணியகத்தின் ஏழாவது மாவட்ட அலுவலகமாக இவ் அலுவலகம் யாழ்ப்பாணத்தில் அமைவதுடன் இதற்கு முன்னர் கண்டி, காலி, அனுராதபுரம், வவுனியா,பதுளை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இப்பணியகம் ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தினால் வெளியிடப்படும் வெளியீடுகளை வார நாட்களில்
இங்கு விலைக்கு பெற்றுக்கொள்ள முடியும்.
இந் நிகழ்வில் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க,
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சுரேன் ராகவன் ஆகியோரும் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், அரசாங்க தகவல் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment