வைரஸ் காய்ச்சல் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்! சுகாதார தரப்பு எச்சரிக்கை - Yarl Voice வைரஸ் காய்ச்சல் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்! சுகாதார தரப்பு எச்சரிக்கை - Yarl Voice

வைரஸ் காய்ச்சல் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்! சுகாதார தரப்பு எச்சரிக்கை



கொவிட் -19 வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு மேலதிகமாக, தற்போது நாட்டில் கண்டறியப்படாத வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு சங்கத்தின் தலைவரான உபுல் ரோஹன பொது மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

டெங்கு காய்ச்சல் பரவுவது நாட்டில் ஒரு தொற்றுநோய்க்கான அறிகுறிகளைக் காட்டுகிறது, மேல் மாகாணம் உட்பட நகர்ப்புறங்களில் பெரும்பாலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கட்டுமானப் பணியிடங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகளவில் கண்டறியப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், மக்களை அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post