யாழ்.பல்கலைகழக நுழைவாயிலை மூடி இன்று காலை மாணவா்கள் பாாிய முடக்கல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனா்.
கடந்த பல மாதங்களாக செயழிழந்து கிடக்கும் யாழ்.பல்கலைகழக மாணவா் ஒன்றியத்தை அங்கீகாிக்குமாறுகோாியும்,
இன்று காலை தொடக்கம் பிரதான நுழைவாயிலை மூடி மாணவா்கள் போராட்டம் நடாத்திவருகின்றனா்.
இந்நிலையில் பல்கலைகழக ஊழியா்கள், ஆசிாியா்கள், உள்நுழைய முடியாத நிலையேற்பட்டிருக்கின்றது.
இதனையடுத்து துணைவேந்தா்
ஸ்ரீசற்குணராஜா இன்றைய தினம் பரீட்சைகள் நடந்துகொண்டிருப்பதால் வாயில் கதவை திறக்கும்படியும்,
பிரச்சினைகள் தொடா்பாக பேசுவதற்கு சந்தா்ப்பம் வழங்கப்படும் எனவும் மாணவா்களிடம் கூறியிருந்தாா்.
எனினும் எழுத்தில் முன்வைத்த கோாிக்கை 4 மாதங்களாக எடுக்கப்படவில்லை. என கூறி மாணவா்கள் போராட்டத்தை தொடா்ந்தனா்.
Post a Comment