பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்க தலைவர் சிவகரன் விசாரணைக்கு அழைப்பு! - Yarl Voice பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்க தலைவர் சிவகரன் விசாரணைக்கு அழைப்பு! - Yarl Voice

பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்க தலைவர் சிவகரன் விசாரணைக்கு அழைப்பு!



தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்க அமைப்பின் தொடர்பாக விசாரனை மேற்கொள்வதற்காக இவ் அமைப்பின் தலைவர் வீ.எஸ்.சிவகரனுக்காக கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரனைப் பிரிவுக்கு ஆஐராகும்படி அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் இயங்கி வரும் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்க அமைப்பின் தலைவர் வீ.எஸ்.சிவகரனை எதிர்வரும் 18.02.2022 அன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரனைப் பிரிவின் பிரிவு 01 இன் நிலையப் பொறுப்பதிகாரியை சந்திக்குமாறு திங்கள் கிழமை (14.02.2022) பிற்பகல் வவுனியா  பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நேரடியாக அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்க அமைப்பின் தலைவர் வீ.எஸ்.சிவகரன் விசாரனைக்கு வருகைத் தரும்போது தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்க அமைப்பின் சம்பந்தமான வாக்கு மூலம் ஒன்றைத் தருவதற்கு இவ் நிறுவனம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் எடுத்து வரும்படியும் அவர் பணிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post