இரண்டு சம்பவங்களிற்காக அருந்திகவை இராஜினாமா செய்யச் சொன்ன ஜனாதிபதி– மகிந்தவிடம் சென்று கதறியழுதும் பலன் இல்லை - Yarl Voice இரண்டு சம்பவங்களிற்காக அருந்திகவை இராஜினாமா செய்யச் சொன்ன ஜனாதிபதி– மகிந்தவிடம் சென்று கதறியழுதும் பலன் இல்லை - Yarl Voice

இரண்டு சம்பவங்களிற்காக அருந்திகவை இராஜினாமா செய்யச் சொன்ன ஜனாதிபதி– மகிந்தவிடம் சென்று கதறியழுதும் பலன் இல்லை



ஜனாதிபதி இரண்டு சம்பவங்களிற்காக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணாண்டோவை இராஜினாமா செய்யுமாறு கோரினார் எனத் தெரிவித்துள்ள அரசியல் வட்டாரங்கள், இராஜாங்க அமைச்சர் பிரதமரிடம் சென்று கதறி அழுதார் எனத் தெரிவித்துள்ளன.

ராகம மருத்துவ பீடத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மாத்திரமன்றி நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பிரபல எத்தனோல் கடத்தல்காரரை கைதுசெய்து பிணையில் விடுவிக்க உதவியமை தொடர்பிலும் அருந்திக பெர்னாண்டோவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது .

ஜனாதிபதியின் உத்தரவையடுத்து அருந்திக பெர்னாண்டோ உடனடியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கச் சென்றார். அவர் அழுதுகொண்டே தனது துயரத்தை பிரதமரிடம் தெரிவித்ததாகவும், தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆனால் பிரதமர் தலையிட மறுத்ததை அடுத்து அருந்திக பதவி விலக நேரிட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post