பயங்கரவாத தடைச் சட்டத்தை தடை செய்யக்கோரிய கையெழுத்து போராட்டம் இன்றையதினம் யாழ்ப்பாணம் - நெல்லியடி பகுதியில் இடம்பெற்றது.
இன்று காலை வடமராட்சி, நெல்லியடி பேருந்து நிலையத்தில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் தலைமையில் இந்த கையெழுத்து போராட்டம் இடம்பெற்றது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இளைஞர் யுவதிகள் விசாரணை இன்றி கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதுடன் மிகவும் மோசமான சட்ட ஏற்பாடுகளை கொண்ட பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ச்சியான கையெழுத்துப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment