இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால்(34) இந்திய சுற்றுப்பயணத்தின் பின்னர் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த அற்புதமான வாய்ப்பை எனக்கு வழங்கியமைக்காகவும் எனது தாய்மண்ணின் கௌரவத்தை மீண்டும் கொண்டுவருவேன் என நம்பிக்கை வைத்தமைக்காகவும் இலங்கை கிரிக்கெட்டிற்கு நான் கடமைப்பட்டிருக்கின்றேன் என சுரங்க லக்மால் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
சுரங்க லக்மால் 68 டெஸ்ட்போட்டிகளில் 168 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார் இவற்றில் 130 விக்கெட்கள் வெளிநாட்டு ஆடுகளங்களில் வீழ்த்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியா தென்னாபிரிக்கா நியுசிலாந்து மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஒரு இனிங்சில் ஐந்து விக்கெட்களை கைப்பற்றியுள்ள லக்மால் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்கு தலைமைதாங்கியுள்ளார்.
Post a Comment