பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற கையெழுத்துப் போராட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கையெழுத்திட்டு ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.சுகிர்தன், இ.ஆனல்ட், கே.சயந்தன் ஆகியோரும்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபைத் தவிசாளர்கள், உறுப்பினர்கள், மணிவண்ணன் ஆதரவு உறுப்பினர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பொது மக்களும் கலந்து கொண்டு கையெழுத்துக்களை பதிவு செய்திருந்தனர்.

Post a Comment