கைவிடப்பட்ட பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த இராணுவம்! - Yarl Voice கைவிடப்பட்ட பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த இராணுவம்! - Yarl Voice

கைவிடப்பட்ட பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த இராணுவம்!



வல்வெட்டித்துறை வீதியில் கண்டெடுக்கப்பட்ட பணப்பையை உரியவரிடம்  நேற்று இராணுவத்தினர் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது வல்வெட்டித்துறைப் பகுதியில் வீதியில் பணப்பை ஒன்று தவற விடப்பட்ட நிலையில் அந்த வீதியால் வந்த இராணுவத்தினர் குறித்த பணப்பையை மீட்டனர்.

அதில் 20 ஆயிரம் ரூபா பணம் இரண்டு வங்கி அட்டைகள் தேசிய அடையாள அட்டை என்பன காணப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இன் நிலையில் உரியவர் அடையாளம் காணப்பட்டு அதைத்தொடர்ந்து பொலிசார் முன்னிலையில் குறித்த பணப்பை ஒப்படைக்கப்பட்டது.20
--

0/Post a Comment/Comments

Previous Post Next Post