யாழில் பட்டப்பகலில் வயோதிப பெண்ணொருவர் அடித்து கொலை! - Yarl Voice யாழில் பட்டப்பகலில் வயோதிப பெண்ணொருவர் அடித்து கொலை! - Yarl Voice

யாழில் பட்டப்பகலில் வயோதிப பெண்ணொருவர் அடித்து கொலை!



யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் வீடொன்றில் வயோதிப பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் செவ்வாய்கிழமை மதியம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியை சேர்ந்த மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (வயது 72) எனும் பெண்ணே அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில், அப்பெண் தனிமையில் இருந்த வேளை, வீட்டு வேலைக்கு வந்த இளைஞனே பெண்ணை பூ சாடியால் அடித்துக்கொலை செய்த பின்னர் , அப்பெண் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post