பாடசாலை வாகன கட்டணம் குறைந்தது 1,000 ரூபாவால் அதிகரிக்கும் - Yarl Voice பாடசாலை வாகன கட்டணம் குறைந்தது 1,000 ரூபாவால் அதிகரிக்கும் - Yarl Voice

பாடசாலை வாகன கட்டணம் குறைந்தது 1,000 ரூபாவால் அதிகரிக்கும்



அண்மையில் எரிபொருள் விலை அதிகரிக்கப் பட்டுள்ள நிலையில் மாதாந்த போக்குவரத்துக் கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது.

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துக் கட்டணம் குறைந்தபட்சம் ரூ. 1,000 மற்றும் அதிகபட்சம் ரூ. 2,000 அதிகரிக்கப்படும் என சங்கத்தின் செயலாளரான லலித் சந்திரசிறி பெர்னாண்டோ தெரிவித்தார்.

அண்மைய எரிபொருள் அதிகரிப்புக்கு ஏற்ப விலையை அதிகரிக்க வேண்டுமாயின் மாதாந்த கட்டணத்தை 45 முதல் 100 வீதம் வரை அதிகரிக்க வேண்டும்.

எவ்வாறாயினும் பொது மக்களுக்கு எவ்வித சம்பள அதிகரிப்பும் வழங்கப்படவில்லை என்பதைக் கருத்திற்க் கொண்டு  அவர்கள் பெயரளவிலான அதிகரிப்புக்கு வழிவகுத்த தாகவும் அவர் தெரிவித்தார்.

தொழில் துறையைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், பொது மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் நோக்கில் அல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post