பொறியியலாளராக வந்து மக்களுக்கு சேவையாற்றுவதே தனது எதிர்கால லட்சியம் என 2ஆயிரத்து 21ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்ட மாணவன் தெரிவித்துள்ளான்.
நேற்றிரவு வெளியாகிய 2 ஆயிரத்து 21ஆம் ஆண்டு தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு அடிப்படையில் 198 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியில் யாழ்ப்பாணம் - கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்ஸன் முதலிடத்தை பெற்றுள்ளான்.
இந்த நிலையில் தமது எதிர்கால லட்சியம் தொடர்பில் இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தமிழ்ச்செல்வன் கஜலக்ஸன் இவ்வாறு தெரிவித்துள்ளான்.
Post a Comment