2021 உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.
பரீட்சைகள் இன்று முதல் ஏப்ரல் 8 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கத்திய மற்றும் பரதநாட்டிய நடனம், ஓரியண்டல், கர்நாடக மற்றும் மேற்கத்திய இசைப் பாடங்களுக்கான நடைமுறைப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் அமைக்கப் பட்டுள்ள செய்முறை பரீட்சை மையங்களில் நடைபெறவுள்ளன.
பயோ சிஸ்டம்ஸ் டெக்னோலஜி, இன்ஜினியரிங் டெக்னோலஜி, ஹோம் எகனாமிக்ஸ், நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் ஆகிய பாடங்களுக் கான சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளிலான செய்முறைப் பரீட்சைகள் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் நடைபெறவுள்ளன.
Post a Comment