தடுத்து வைக்கப்பட்ட 22 இந்திய மீனவர்கள் விடுதலை! ஒரு படகு பறிமுதல்... ஊற்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு! - Yarl Voice தடுத்து வைக்கப்பட்ட 22 இந்திய மீனவர்கள் விடுதலை! ஒரு படகு பறிமுதல்... ஊற்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு! - Yarl Voice

தடுத்து வைக்கப்பட்ட 22 இந்திய மீனவர்கள் விடுதலை! ஒரு படகு பறிமுதல்... ஊற்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு!



எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு இழுவப்படகுடன் 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு, ஊற்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். குறித்த வழக்கு மீளவும் இன்று ஊற்காவற்றுறை நீதிமன்றில் நீதவீன் J.கஜநிதிபாலன் முன் நிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது நீரியல் வளத்துறை அதிகாரிகளால் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. 

01)இலங்கை எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டது.

02) நீரியல் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்டது, கைது செய்யும் வேளையிலும் வலைகளை தொடக்கறுத்து வைக்காமை.

03) தடைசெய்யப்பட்ட இழுவைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டமை.

 ஆகிய 3 குற்றச் சாட்டுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதவான் மூன்று குற்றச் சாட்டுக்களுக்கும் தலா ஆறு மாதம் சதாரண சிறைத் தண்டணை 10 வருடங்களுக்கு ஒத்தி வைத்து நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

13 மீனவர்கள் மீன்பிடி இழுவைப்படகு உரிமையாளரும் உள்ளமையினால் படகு பறிமுதல், மற்றைய படகுக்கான உரிமை கோரும் வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 24 தவணையிடப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post