மார்ச் 5ஆம் திகதியுடன் மின்வெட்டு நிறுத்தப் படும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (28) அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மின்வெட்டு மற்றும் எரிபொருள் நெருக்கடி தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
போக்குவரத்து மற்றும் எரிபொருள் நெருக்கடிகள் மார்ச் மாத இறுதிக்குள் தீர்க்கப்படும் என அமைச்சர் பசில் ராஜபக்ஷ நம்பிக்கை தெரிவித் தார்.
ரயில் மற்றும் பேருந்துகளுக்கான எரிபொருள் விநியோகத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து நீக்கி போக்கு வரத்து அமைச்சிடம் ஒப்படைக்கும் யோசனை யும் முன்வைக்கப்பட்டது. இது குறித்து எதிர்காலத்தில் விரிவாக விவாதிக்க முடிவு செய்யப்பட்டது.
மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் மானியம் அல்லது ஊக்கத்தொகையை தொடர்ந்து வழங்குவதா என்பது குறித்தும் அமைச்சரவை யில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
Post a Comment