ரஷ்ய ஜனாதிபதி உக்ரைன் மக்களின் மக்களையும் அவர்களது தேசப்பக்தியையும் குறைத்து மதிப்பிட்டுள்ளார்.
உக்ரைனின் முதல் பெண்மணி ஒலேனா ரஸ்யாவின் பாரிய படுகொலைகளை கண்டித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
ரஸ்யாவின் படையெடுப்பு குறித்து உணர்வுபூர்வமான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் தனது நாட்டின் பொதுமக்கள் பாரிய படுகொலை செய்யப்படுவதை கண்டித்துள்ளார்.
உக்ரைன் அமைதியை சமாதானத்தை விரும்புகின்றது ஆனாலும் தனது எல்லைகளை அடையாளத்தை பாதுகாக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தன்று உக்ரைனின் ஜனாதிபதியின் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள பகிரங்க கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பலர் பேட்டிக்கான அனுமதியை கோரியுள்ளனர் இந்த கடிதம் அவர்கள் அனைவருக்குமான பதிலாக காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவின் படையெடுப்பு என்பது நம்புவதற்கு சாத்தியமற்ற விடயம் என தெரிவித்துள்ள அவர் எங்கள் நாடு அமைதியாக காணப்பட்டது, எங்கள் நகரங்கள் கிராமங்களில் வாழ்க்கை முழுமையாக காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையில் இது உக்ரேனிய மக்களை படுகொலை செய்யும் நடவடிக்கை என உக்ரைனின் முதல் பெண்மணி தெரிவித்துள்ளார்.
இந்த படையெடுப்பின் மிகவும் பயங்கரமான பேரழிவை ஏற்படுத்திய விடயம் என்னவென்றால் குழந்தைகள் சிறுவர் உயிரிழப்பே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒக்திர்காவில் எட்டுவயது அலைஸ்அவளது பேரன் அவளை பாதுகாக்க முயன்றவேளை கொல்லப்பட்டாள்,தலைநகரில் பொலினா எறிகணை வீச்சில் உயிரிழந்தாள் என அவர் தெரிவித்துள்ளார்.
14 வயது ஆர்சேனியை வீதியில் சிதறல்கள் தாக்கின, அவளை காப்பாற்ற முடியவில்லை- கடுமையான தாக்குதல் காரணமாக அவளை காப்பாற்றுவதற்கு அம்புலன்ஸ் செல்ல முடியாததே காரணம் என முதல் பெண்மணி தெரிவித்துள்ளார்.
ரஸ்யா பொதுமக்களிற்கு எதிராக தாக்குதலை மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கின்றது நான் கொல்லப்பட்ட சிறுவர்களின் பெயர்களை முதலில் தெரிவிக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களில் பல பிள்ளைகள் பிறந்துள்ளனர் அவர்கள் அமைதி என்றால் என்னவென அனுபவிக்கவில்லைஎனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி உக்ரைன் மக்களின் மக்களையும் அவர்களது தேசப்பக்தியையும் குறைத்துமதிப்பிட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மக்கள் மலர்க்கொத்துக்களை வழங்கி வரவேற்பாளர்கள் என கிரெம்ளின் பிரச்சாரகர்கள் தெரிவித்தனர் ஆனால் உக்ரைன் மக்கள் மொலொட்டொவ் கொக்டெயிலை பயன்படுத்தியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனிற்கு வழங்கிவரும் ஆதரவிற்காக உலக நாடுகளின் மக்களிற்கு நன்றியை தெரிவித்துள்ள முதல் பெண்மணி மேற்குலகை வான்வெளியை மூடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
தரையில் நடக்கும் போரை நாங்கள்பார்த்துக்கொள்வோம் என தெரிவித்துள்ள அவர் ஊடகங்கள் உண்மையை வளர்க்கவேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
அணுவாயுத போரை ஆரம்பிக்கப்போவதாக எச்சரித்துள்ள புட்டினை நாங்கள் தடுத்து நிறுத்தாவிட்டால் எங்கள் எவருக்கும்உலகில் பாதுகாப்பான இடமில்லாமல் போகும் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment