இக்கூட்டத்தில் மாநகர ஆணையாளர், யாழ்ப்பாண பிரதேச செயலாளர், தேசிய நீர்வழங்கல் அதிகார சபை அதிகாரிகள், நகரத் திட்டமிடல் அதிகார சபை அதிகாரிகள், இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு திணைக்கள அதிகாரிகள் யாழ்ப்பாண வர்த்தக சங்கத்தினர் , வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இக் கலந்துரையாடலில் வாகனத்தரிப்பிடம், பொதுமக்களுக்கான நடைபாதை மற்றும் வடிகால் ஆகிய அம்சங்களுடன் யாழ்ப்பாண ஆஸ்பத்திரி வீதியினை அகலித்து மீள் அமைப்பது தொடர்பான செயற்றிட்டம் இறுதி செய்யப்பட்டது. அத்துடன் குறித்த பணிகளினை எதிர்வரும் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது
Post a Comment