நாட்டின் பொருளாதாரத்தைச் சூறையாடுவதற்கும் கறுப்புச் சந்தையை ஊக்குவிப்பதற்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவே வழி அமைத்தார் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றம் சாட்டினார்.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் என்றுமில்லாதவாறு நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாக சென்று கொண்டிருக்கின்றது.
நாளுக்கு நாள் பொருட்களின் வெளியேற்றத்தினால் சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு உள்ள நிலையில் அதைப்பற்றி கவலைப்படாத அரசாங்கமாக கோட்டபாய அரசாங்கம் காணப்படுகிறது.
நாட்டை முன்னேற்ற போகிறோம் என கூறி ஆட்சிக்கு வந்த கோட்டபாய ராஜபக்ச நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து செல்லும் நிலையில் ஏழு மூளைகள் காணப்படுவதாக நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப கூடியவர் பசில் ராஜபக்ச என நிதியமைச்சர் ஆக்கினார்கள்.
அமெரிக்க பிரஜை ஆன நிதி அமைச்சராக பசில் ராஜபக்ஷ பொறுப்பேற்றதன் பின் கறுப்புச் சந்தையில் அமெரிக்க டொலர் 290 ரூபாவுக்கு மாற்றப்படுகிறது.
ஒரு லிட்டர் பெட்ரோல் 200 ரூபாயை தாண்டியுள்ள நிலையில் மா ஒரு கிலோ180 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
நாட்டில் ஏற்றுமதி மூலம் கிடைக்கின்ற வருமானம் 1300 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்படுகின்ற நிலையில் வெளிநாடுகளுக்கு செலுத்தவேண்டிய ஒரு மாத கடனின் வட்டி 1900மில்லியன் டெலராகக் காணப்படுகிறது.
நாட்டை முன்னேற்றப் போகிறோம் என கூறிய ராஜபக்சக்களான பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் நாட்டை அதலபாதாளத்துக்கு இட்டுச் செல்கின்றனர்.
பசில் ராஜபக்ச நிதியமைச்சரானால் அவரின் இவரின் ஏழு மூளைகளைப் பயன்படுத்தி நாட்டின் சுபிட்சமான பொருளாதாரத்தை ஏற்படுத்தப்போகிறார் எனக் கூறியவர்கள் வாயடைத்து மௌனிகளாக உள்ளனர்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் நாட்டை ஒரு பகுதியினர் சூறையாடி சென்ற நிலையில் தற்போதைய ராஜபக்சக்கள் நாட்டை வெளிநாடுகளுக்கு ஈடுவைத்து வருகின்றன.
ஆகவே மக்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்கி ஆட்சி செய்வதை விட உங்கள் இயலாமையை வெளிப்படுத்தி ஆட்சியில் இருந்து விலகுவதே மக்களுக்கு செய்யும் உபாயம் என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment