யாழ் மாநகர சபையிலும் டீசல் இல்லை! ஒத்திவைக்கப்பட்டது அமர்வு - Yarl Voice யாழ் மாநகர சபையிலும் டீசல் இல்லை! ஒத்திவைக்கப்பட்டது அமர்வு - Yarl Voice

யாழ் மாநகர சபையிலும் டீசல் இல்லை! ஒத்திவைக்கப்பட்டது அமர்வு



டீசல் இயந்திரத்திற்கு போதிய அளவு டீசல் இல்லாத காரணத்தினால் யாழ்ப்பாண மாநகர சபையின் அமர்வு மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனினால் அரைமணித்தியாலயம் ஒத்திவைக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று காலை சபை மண்டபத்தில் மாநகர முதர்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது யாழ் மாநகர சபையின் 27 வட்டாரங்களில் குருக்குவீதிகள் சிறிய வீதிகளில் தெருவிளக்குகள் ஒளிரசெய்தல் தொடர்பான விவாதம் இடம்பெற்றது.

இது தொடர்பான கருத்துக்களை மாநகர சபை உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது அதில் தீடிரென மின்சாரம்  இல்லாமல் போனது.

இதனால் டீசல் இயந்திரத்திற்கு போதிய அளவு டீசல் இல்லாத காரணத்தினால் சபை அமர்வு சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post