அபுதாபியின் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரக ஆயுதப்படைகளின் துணைத் தளபதியுமான ஷேக் மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடமிருந்து தொலைபேசி அழைப்பு ஒன்றைப் பெற்றுள்ளார்.
இந்த அழைப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவுகள் மீளாய்வு செய்யப்பட்டன. பொருளாதார ஒத்துழைப் பையும், வர்த்தகம் மற்றும் எரிசக்தியை தொடர்ந்து வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் தலைவர்களால் வலியுறுத்தப்பட்டது.
Post a Comment