ஷேன் வார்னிடமிருந்து வந்த கடைசி மெசேஜ், அதை ஒருபோதும் அழிக்க மாட்டேன் -கில்கிறிஸ்ட் உருக்கம் - Yarl Voice ஷேன் வார்னிடமிருந்து வந்த கடைசி மெசேஜ், அதை ஒருபோதும் அழிக்க மாட்டேன் -கில்கிறிஸ்ட் உருக்கம் - Yarl Voice

ஷேன் வார்னிடமிருந்து வந்த கடைசி மெசேஜ், அதை ஒருபோதும் அழிக்க மாட்டேன் -கில்கிறிஸ்ட் உருக்கம்



தாய்லாந்தில்  மாரடைப்பால் இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு மறைந்த ஷேன்வோர்ன் தனக்கு அனுப்பிய மெசேஜை ஆடம் கில்கிறிஸ்ட் வெளிப்படுத்தியுள்ளார். உலகம் முழுவதிலுமிருந்து சோகத்தை வெளிப்படுத்திய வோர்னின் அதிர்ச்சி மரணம் ஆஸ்திரேலிய அணியினர் தாங்கள் ஒன்றாகக் கழித்த நேரத்தை நினைவு கூரச் செய்துள்ளது.
இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு ஷேன்வோர்னுடன் கில்கிறிஸ்ட் பேசியுள்ளார். மறைந்த மார்ஷுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கில்கிறிஸ்ட் தயாரித்த வாழ்த்துரையை புகழ்ந்து  அஷேன்வோர்ன்வருக்கு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் ஏபிசி நியூஸ்-க்காக கில்கிறிஸ்ட் கூறும்போது, “ஒரு வாரம் முன்புதான்ஷேன்வோர்ன் பேசினேன்.  அவரிடமிருந்து அருமையான மெசேஜ் ஒன்று வந்தது. அவர் இறப்பதற்கு 8 மணி நேரம் முன்னதாக இந்த மெசேஜை அவர் அனுப்பியிருக்கலாம். என்னுடையஎனது நெருங்கிய நண்பர்கள்என்னை ‘சர்ச்’ என்று அழைப்பார்கள். இதனால் என்னை செல்லமாக எரிக் கில்சர்ச் என்றே சிலர் அழைப்பார்கள், ஷேன்வோர்னும் என்னை ‘சர்ச்சி’ என்றே அழைப்பார். அவர் அப்படி அழைக்கும்போது நட்பின் நெகிழ்ச்சி இருக்கும்.

அவர் தன் மெசேஜில், ‘சர்ச்சி (கில்கிறிஸ்ட்),  மார்ஷுக்கு நீ செய்த அஞ்சலி அருமை’ என்றார். என்னுடைய குழந்தைப் பருவ ஹீரோ  மார்ஷுக்கு நெருக்கமாக நாம் இருவருமே வரவில்லை. வெல் டன் சார் என்று  எனக்கு கடைசியாக மெசேஜ் செய்திருந்தார். அதுதான் கடைசி தொடர்பு. அந்த டெக்ஸ்ட் மேசேஜை நான் ஒருநாளும் டிலீட் செய்ய மாட்டேன்.
ஷேன்வோர்ன்பந்து வீச்சுக்கு விக்கெட் கீப்பிங் செய்ததே எனக்கு மிகப்பெரிய பெருமையாக உள்ளது. ஒரு மாஸ்டர் பணி செய்யும் போது அவரை அருகில் இருந்த இரண்டு பாக்கியசாலிகள் நானும் இயன் ஹீலியும்தான். அவர் தொப்பியைக் கழற்றி விட்டால், பந்து வீச வரப்போகிறார் என்று அர்த்தம். அதன் பிறகு அவர் செய்யும் அட்டகாசம் ஒரு நாடகம்தான். அவர் திரைப்பட இயக்குநர் போல்தான் செயல்படுவார். ஸ்பீல்பர்க் போன்ற ஆளுமை ஷேன் வார்ன். ஷேன் வார்னுடன் கீப்பர்-பவுலர் உறவே ஒரு தனி ரகம், மறக்க முடியாதது அது. ” இவ்வாறு கூறினார் கில்கிறிஸ்ட்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post