ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன மகிழ்ச்சியான செய்திக்கு ரசிகர்கள் இணையத்தின் வாயிலாக வாழ்த்து கூறி வருகின்றனர்.
இயக்குநர், பாடகி என பன்முகத்தன்மை கொண்ட ஐஸ்வர்யா. தனது கணவர் தனுஷை வைத்து 3 என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார்.
இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிப்படமாக அமைந்து ஐஸ்வர்யாவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
3 திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்தை வைத்து வைராஜா வை என்ற வித்தியாசமான படத்தை இயக்கினார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றுத்தந்தது. அதேபோல ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் உன் மேலஆசை தான் என்ற பாடலை தனது கணவர் தனுஷு டன் இணைந்து பாடி இருந்தார். இந்த பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார் ஐஸ்வர்யா.
9 ஆண்டுகளுக்கு பிறகு
கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படங்களில் தலைகாட்டாமல் இருந்த ஐஸ்வர்யா. தற்போது, முசாபிர் எனும் ஆல்பம் பாடல் வீடியோவை இயக்கியும் தயாரித்தும் வருகிறார். இந்த ஆல்பம் பாடலுக்கு பயணி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பயணி வீடியோவை காதலர் தினத்தன்று வெளியிட முடிவு செய்திருந்த நிலையில், ஐஸ்வர்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டீசர் வெளியானது
பின்னர் மகளிர் தினமான மார்ச் 8ந் தேதி இந்த அல்பம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் காய்ச்சலால் ஐஸ்வர்யா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, பயணி வீடியோவின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த டீசரைப் பார்த்த குஷ்பு, சுஹாசனி அனைவரும் பாராட்டி இருந்தனர்.
எல்லாமே நல்லதுக்குத்தான்
இந்நிலையில், ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயணி வீடியோ நாளை மாலை 4.44 மணிக்கு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். மேலும், அந்த பதிவில், இறுதியாக காத்திருப்பு முடிந்தது .. 9 வருட இடைவெளிக்குப் பிறகு எனது முதல் சிங்கிள் பயணி நாளை வெளியாகிறது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள என்னால் காத்திருக்க முடியாது என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், பலர் எல்லாமே நல்லதுக்குத்தான் ஹேப்பியா இருங்க மேடம் என்று கூறியுள்ளனர்.
Post a Comment