யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக இலங்கைத் தமிழர்களுக்கு உதவிகளை வழங்க இந்திய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலக அறையில் பிரதமர் நரேந்திர மோடி- மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போதே தமிழக முதல்வர் இந்த கோரிக்கையை முன்வைத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
லங்கை தமிழர் பிரச்சினை-ஈழத் தமிழர்களுக்கு சம உரிமையியல் மற்றும் அரசியல் உரிமைகள்
ஆ) இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையின் காரணமாக அல்லலுறும் இலங்கை தமிழர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழக அரசின் சார்பில் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக.தமிழக முதல்வர் இந்திய பிரதமருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்
) பாக் வளைகுடாவில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்
ஆ) "கச்சத்தீவு" மீட்பது மற்றும் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுப்பது தொடர்பாக.தமிழக முதல்வர் இந்திய பிரதமருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்
Post a Comment