பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான சுலோகங்கள் அடங்கிய ஸ்டிக்கர் வாகனங்களில் ஒட்டப்பட்டதுடன் துண்டுப்பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இந்த விழிப்புணர்வு நிகழ்வு ஆரம்பமானது.
"அனைவருக்கும் இனிமையான பயணம்" எனும் தொனிப்பொருளில் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் தேசிய பெண்கள் குழு, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துடன் இணைந்து பொதுப்போக்குவரத்து பேரூந்துகளில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்காக விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது முன்னாள் மகளிர் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளரும், தற்போதைய தேசிய பெண்கள் குழு உறுப்பினருமான இமெல்டா சுகுமார், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ் மத்திய பேருந்து நிலைய முகாமையாளர், மாவட்ட செயலக அதிகாரிகள் உத்தியோகஸ்தர்கள் எனபலரும் கலந்துகொண்டனர்.
Post a Comment