சிரேஸ்ட அமைச்சர்களை கண்காணிக்கும் பொறுப்பு நாமலிற்கு - விமல் - Yarl Voice சிரேஸ்ட அமைச்சர்களை கண்காணிக்கும் பொறுப்பு நாமலிற்கு - விமல் - Yarl Voice

சிரேஸ்ட அமைச்சர்களை கண்காணிக்கும் பொறுப்பு நாமலிற்கு - விமல்




சிரேஸ்ட அமைச்சர்களை கண்காணிக்கும் பொறுப்பு நாமல் ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டுள்ளது என விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

2015 இல் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மீது குடும்ப ஆட்சி குறித்து முன்வைக்கப்பட்ட  குற்றச்சாட்டுகளை விட அதிகளவில் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக குடும்ப ஆட்சி குற்றச்சாட்டுகள்  முன்வைக்கப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
2015இல் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த மூன்று அமைச்சர்களே பதவி வகித்தனர் தற்போது  அதனை விட அதிகமானவர்கள் பதவி வகிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையை எத்தனை முறை மாற்றினாலும் நாமல் ராஜபக்சவிற்கு ஏதாவது பதவியை வழங்குவார்கள்  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post