புதிய எதிர்கட்சி குழுவொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ள விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் எதிரணி வரிசையில் அமரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நானும் உதயகம்மன்பிலவும் தற்போது அரசாங்கத்தின் பகுதியில் அமர்ந்திருக்கின்றோம் என தெரிவித்துள்ள அவர் நீங்கள் தற்போது எதிரணி உறுப்பினரா என்ற கேள்விக்கு. இன்னும் இல்லை என பதிலளித்துள்ளார்.
புதிய எதிர்கட்சி குழுவை உருவாக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ள அவர் பலர் இதில் இணைந்துகொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம் என குறிப்பிட் டுள்ளார்,அரசாங்கம் பெரும்பான்மை இழந்தால் அது நிதியமைச்சர் பதவி விலகும் நிலையை ஏற்படுத்தும்,ஜனாதிபதி பதவி விலகவேண்டியதில்லை நிதியமைச்சரே பதவி விலகவேண்டும் என தெரிவித்துள்ளார்.
Post a Comment