இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் முன்பக்க சிந்து பாஸ் பயணித்துக் கொண்டிருந்தபோது கழண்டு ஓடிய சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தின் முன் பக்கச் சில்லு பரந்தன் பகுதியில் அச்சில் இருந்து திடீரென விலகியது.
இந்நிலையில் சாரதியின் சாமர்த்தியத்தால் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாத வண்ணம் பேருந்து நிறுத்தப்பட்டது.
--
Post a Comment