மக்களின் துன்பங்களுக்கு நிதி அமைச்சரே முழுப் பொறுப்பு! உதயகம்மன்பில - Yarl Voice மக்களின் துன்பங்களுக்கு நிதி அமைச்சரே முழுப் பொறுப்பு! உதயகம்மன்பில - Yarl Voice

மக்களின் துன்பங்களுக்கு நிதி அமைச்சரே முழுப் பொறுப்பு! உதயகம்மன்பில



மக்கள் வரிசைகளில் நிற்கும் துன்பங்களுக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ வே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சரின் தவறுகளினால் எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்துகளை பெறுவதற்கு பெரும்பாலான பொதுமக்கள் வரிசையில் நிற்கின்றனர்.
கடந்தாண்டு பொருட்களை இறக்குமதி செய்ய 20.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டதாகவும், அதில் மருந்து, மருத்துவ உபகரணங்கள், எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரி இறக்குமதிக்காக 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்காக கிட்டத்தட்ட 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
புற்று நோய் அல்லது இருதய நோய்க்கான மருந்து தட்டுப்பாடு காரணமாக ஒருவர் உயிரிழந்தால், அவர்களின் மரணத்திற்கு அமைச்சர் பசில் ராஜபக்ஷ பொறுப்பேற்க வேண்டும்.
பொருளாதாரத்தை பலவீனப்படுத்த நிதியமைச்சர் வேண்டுமென்றே நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஊடகசந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இரட்டைக் குடியுரிமை கொண்ட எவருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படமாட்டாது என அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய போது எட்டப்பட்ட ஒப்பந்தத்தை அரசாங்கம் மீறியுள்ளது.
தான் தொழில்நுட்ப ரீதியாக அமைச்சராக இருக்கும் போதே, அனுமதி பெறுவதற்கு தனது கையொப்பம் தேவைப்படுவதைத் தவிர, தனது அமைச்சுக் கடமைகளில் இருந்து விலகியதாகவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு உடன்படும் போது வெளிநாட்டு பிரஜாவுரிமை கொண்ட எந்தவொரு நபரையும் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதற்கு அல்லது அமைச்சுப் பதவியை வகிப்பதற்கு தாங்கள் உடன்படவில்லை என அமைச்சர் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதியுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியதாகவும், இந்த விடயத்தின் அடிப்படையில் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தனது பிரஜாவுரிமை தொடர்பில் தமக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மாற்றியமைப்பதற்காகவே 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற விரும்புவதாகவும், அது அமைச்சர் பசில் ராஜபக்ஷவையோ அல்லது வேறு எந்த நபரையோ பாராளுமன்றத்திற்குக் கொண்டுவருவதற்காக அல்ல என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
எவ்வாறாயினும் பல நாட்களுக்குப் பின்னர் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post