அரசுக்கு எதிராக மாபெரும் எதிர்ப்புப் கூட்டத்தை தேசிய மக்கள் சக்தி, எதிர்வரும் 23ஆம் திகதி நுகேகொடையில் நடத்தவுள்ளது.
'மக்கள் சக்தியின் எதிர்ப்பு' எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில் ஜே.வி.பி. உட்பட தேசிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் கட்சிகளும், அமைப்புகளும் பங்கேற்கவுள்ளன.
இதன்போது அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்படவுள்ளது.
அத்துடன், தேசிய வளங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
Post a Comment