யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களங்களின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளில் மக்களின் வாழ்வாதார தேவைக்குரிய காணிகளை விடுவிப்பது தொடர்பாகவும், இத்திணைக்களங்களால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளினால் யாழ், கிளிநொச்சி மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாகவும் ஆராயும் சிறப்பு கலந்துரையாடல் இன்று (05.03.2022) யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெறுகிறது.
இக்கலந்துரையாடலில் வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சீ.பீ. ரத்நாயக்க அவர்கள், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்,
வட மாகாண பிரதம செயலாளர் . S.M சமன் பந்துலசேன, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) முரளி, பிரதேச செயலாளர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Post a Comment