காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் ரூபா பணம்; அமைச்சரவை அனுமதி - Yarl Voice காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் ரூபா பணம்; அமைச்சரவை அனுமதி - Yarl Voice

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் ரூபா பணம்; அமைச்சரவை அனுமதி



காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான குடும்பங்களின் வாழ்வினை மீள கட்டியெழுப்புவதற்காக ஒரு இலட்சம் ரூபாவை, ஒரு முறை மாத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நீதியமைச்சர் அலிசப்ரி, இந்த யோசனையை அமைச்சரவையில் முன்வைத்திருந்தார்.

எதிர்கால சந்ததியினரின் நலன்களை பாதுகாக்கவும், நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையிலும் தற்போது வகுக்கப்பட்டுள்ள கொள்கைகளுக்கமைய அந்த குடும்பங்களுக்கு உதவிகளை வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு 17ஆம் இலக்க காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக சட்டத்தின் மூலம், காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு இறப்புச் சான்றிதழ் அல்லது காணக்கிடைக்கவில்லை என்ற சான்றிதழை வழங்குவதற்காக பதிவாளர் நாயகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த அலுவலகத்தால் கண்டறிப்பட்ட விடயங்களின் அடிப்படையில் பதிவாளர் நாயகத்தால் வழங்கப்பட்ட சான்றிதழைப் பெற்றுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின், குடும்பத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியை, ஒருமுறை மாத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post