அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் தற்போதைய மின்வெட்டை மேலும் அதிகரிக்க வேண்டியுள் ளதாக பெற்றோலியம் மற்றும் துறைமுக நல்லிணக்க தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்ட தன் மூலம் உற்பத்தி செய்யப்படும் எரிபொரு ளின் அளவு இழக்கப்பட்டுள்ளதாக அத் தொழிற்சங்க கூட்டமைப்பின் பேச்சாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போதைய எரிபொருள் விநியோகம் நாளையுடன் நிறைவடையவுள்ளதாகவும் மின்வெட்டை அதிகரிப்பதன் மூலம் ஓரளவு எரிபொருளை சேமிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, எரிபொருளை சேமிப்பதற்காக நேற்று குறிப்பிட்ட சில பகுதிகளில் கூடுதலாக ஒரு மணி நேரம் மின்சாரத்தை துண்டிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றார்.
Post a Comment