தென்னைப் பயிர் செய்கை சபையின் மானியத்திட்டங்களை மேற்கொண்ட தென்னைப் பயிர் செய்கையாளர்களுக்கான மானியக் காசோலை வழங்கும் நிழைவு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
கரவெட்டி, புலோலி மற்றும் அம்பன் ஆகிய கமநல சேவை பிரிவுகளில் தென்னை பயிர் செய்கையினை மேற்கொள்ளும் 115 பயனாளிகளுக்கு இன்று குறித்த கமநல சேவை நிலையங்களில் வைத்து மானியங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வுகளில் பிராந்திய தென்னை பயிர் செய்கை முகாமையாளர் தே.வைகுந்தன், தென்னை பயிர் செய்கை பிராந்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் தி.ரவிமயூரன், தேசிய தமிழர் சக்தி யாழ் மாவட்ட இணைப்பாளர் ஜெ.சத்தியேந்திரன், கரவெட்டி கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் த.திலீப், புலோலி கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமக்கார அமைப்பு பிரதிநிதிகள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment