கடன் விவகாரம்; யாழில் கடத்தப்பட்ட தந்தையும் பிள்ளைகளும் மீட்பு! - Yarl Voice கடன் விவகாரம்; யாழில் கடத்தப்பட்ட தந்தையும் பிள்ளைகளும் மீட்பு! - Yarl Voice

கடன் விவகாரம்; யாழில் கடத்தப்பட்ட தந்தையும் பிள்ளைகளும் மீட்பு!




கடன் கொடுக்கல் - வாங்கல் விவகாரத்தால் தந்தையும் பிள்ளைகள் இருவரும் கடத்தப்பட்ட நிலையில் மறு நாள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆனைக்கோட்டை மற்றும் சாவக்காடு பகுதிகளைச் சேர்ந்த இரு தரப்புக்கு இடையில் கடன் கொடுக்கல் - வாங்கல் விவகாரம் நீடித்து வந்துள்ளது.

இது தொடர்பிலான வழக்கு விசாரணை மல்லாகம் நீதிமன்றத்திலும் நடைபெற்றுவருகின்றது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தனது பிள்ளைகளும் கணவரும் கடத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களை விடுவதாக இருந்தால் பணத்தினைத் தரவேண்டும் என்று தொலைபேசி அழைப்பு கிடைக்கப்பெற்றதாகவும் மனைவி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருக்கின்றார்.

சம்பவத்தை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையின் அடிப்படையில் தெல்லிப்பளையில் ஒரு வீட்டில் அடைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் தந்தையும் பிள்ளைகளும் மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் மூவரை கைது செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது மனைவியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய நபர் தனியார் தொலைத் தொடர்பு சேவை ஒன்றின் பணியாளர் என்றும் தெரியவந்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post