எனக்காக போராடிய மற்றொரு தாய் செங்கொடி’’ என செங்கொடியின் நினைவு இல்லத்தில் பேரறிவாளன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கடந்த 2011ம் ஆண்டு பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த செங்கொடி என்கின்ற இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இன்று ஏறத்தாழ 32 ஆண்டுகள் கழித்து பேரறிவாளன் ஜாமீனில் சிறைவாசத்தில் இருந்து வெளிவந்து உள்ளார். இதையடுத்து காஞ்சிபுரம் வருகை தந்த பேரறிவாளன் மக்கள் மன்றத்திற்கு நேரடியாகச் சென்று செங்கொடி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
’’எனக்காக போராடிய மற்றொரு தாய் செங்கொடி’’ என பேரறிவாளன் செங்கொடி நினைவிடத்தில் கூறி உள்ளார். மேலும் ஆகஸ்ட் மாசம் செங்கொடியின் நினைவு தினம் வருவதையொட்டி நிச்சயம் நினைவுதினத்தில் தான் பங்கேற்று கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment