அத்துமீறிய இந்திய மீனவர்கள் மூவர் கைது! நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை!! - Yarl Voice அத்துமீறிய இந்திய மீனவர்கள் மூவர் கைது! நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை!! - Yarl Voice

அத்துமீறிய இந்திய மீனவர்கள் மூவர் கைது! நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை!!



யாழ்ப்பாணம் காரைநகரை அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க வந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மயிலிட்டி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post