யாழ் கலாச்சார மத்திய நிலையம் திறப்பது தொடர்பில் எமக்கு ஒன்றும் தெரியாது! பிரதி முதல்வர் ஈசன் - Yarl Voice யாழ் கலாச்சார மத்திய நிலையம் திறப்பது தொடர்பில் எமக்கு ஒன்றும் தெரியாது! பிரதி முதல்வர் ஈசன் - Yarl Voice

யாழ் கலாச்சார மத்திய நிலையம் திறப்பது தொடர்பில் எமக்கு ஒன்றும் தெரியாது! பிரதி முதல்வர் ஈசன்



இலங்கை இந்தியா நட்புறவின் அடையாளமாக கட்டப்பட்ட யாழ் இந்திய கலாச்சார மத்திய நிலையம் இம்மாதம் இறுதியில் அது தொடர்பில் யாழ் மாநகர சபைக்கு அறிவிக்கப்படவில்லை என யாழ் மாநகர பிரதி முதல்வர் துரைராஜா ஈசன் தெரிவித்தார்.

யாழ் மாநகர சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இந்தியா பிரதமர் நரேந்திர மோடி யாழ் இந்திய கலாச்சார மத்திய நிலையத்தை திறந்து வைப்பதற்காக வருகிறார் என ஊடகங்கள் வாயிலாகவே அறிந்தோம்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள யாழ் இந்தியத் துணைத் ததர் கலாச்சார மத்திய நிலையத்தை பார்வையிட்டமை தொடர்பில் அங்கு பணிபுரிபவர்கள் எனக்கு தெரிவித்தார்கள்.

யாழ் மாநகர சபை என்ற ரீதியில் கலாச்சார மத்திய நிலையத்தை திறந்து வைப்பதற்காக இந்தியா பிரதமரின் வருகை தொடர்பில் தூதரகம் எமக்கு உத்தியோகபூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

ஆனால் தூதரக அதிகாரிகள் குறித்த மத்திய நிலையத்திற்கு சென்று பார்வையிட்டமை இந்தியப் பிரதமர் வருகைக்கான சாதகமான சமிச்சை நிலவுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post