உண்மையை தெரிவித்தமைக்காக தான் ஒழுக்காற்று விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி கட்டுப்படுத்த முடியாததாக மாறியுள்ளது என தெரிவித்துள்ள அதனை ஏற்றுக்கொள்வதால் ஒழுக்காற்று விசாரணைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி கட்டுப்படுத்த முடியாததாக மாறியுள்ளது மக்கள் வீதிகளில் இறங்குவார்கள்,இது நெருக்கடி நீடிக்கும் காலத்தை தீவிரப்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனை நாங்கள் தெரிவித்தால் எங்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment