ரஷ்ய ஜனாதிபதியை யுத்தகுற்றவாளி என்ற அடிப்படையில் விசாரணை செய்யவேண்டும் என தெரிவிக்கும் தீர்மானத்தினை அமெரிக்க செனெட் ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.
செனெட்டர் லின்ட்சே கிராம் முன்வைத்துள்ள தீர்மானம் புட்டினின் வழிகாட்டலின் கீழ் ரஷ்ய படையினர் முன்னெடுக்கும் யுத்த குற்றம்,வன்முறைகள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை செனெட் கடுமையாக கண்டிக்கின்றது என தெரிவித்துள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் புட்டினையும் அவரது பாதுகாப்பு பேரவையையும் இராணுவ அதிகாரிகளையும் இடம்பெற்றிருக்க கூடிய யுத்த குற்றங்களிற்காக விசாரணை செய்யவேண்டும் என செனெட் கேட்டுக்கொள்வதாக அந்த தீர்மானம் தெரிவித்துள்ளது.
இந்த கொடுமைகள் யுத்த குற்றங்களா என விசாரணை செய்வதற்கு தகுதியானவை என செனெட்டின் தலைவர் சுக் சூமர் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானத்தை செனெட் உறுப்பினர்கள் மாற்றுக்கருத்து எதனையும் முன்வைக்காமல் உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக அமெரிக்க செனெட் தொடர்ந்தும் தனது இருதரப்பு ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றது.
Post a Comment