தற்போது நங்கூரமிடப்பட்டுள்ள இரண்டு எரிவாயுக் கப்பல்களில் ஒன்றிலிருந்து சிலிண்டர்களை இறக்குவதற்கு இன்றிரவு தேவையான பெரும்பாலான டொலர்களைப் பெற எதிர்பார்ப்பதாக லிட்ரோவின் உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கப்பலுக்கு பணத்தைச் செலுத்தி இன்று இரவே எரிவாயுவை இறக்கும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இருப்பினும், கேஸ் தட்டுப்பாடு காரணமாக நுகர்வோர் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின் றனர்.
நாட்டை வந்தடைந்த எரிவாயுக் கப்பல்களுக் கான கட்டணச் சிக்கல்கள் காரணமாக போதிய ளவு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படாத நிலை உள்ளது.இதனால் சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதேவேளை நாட்டின் பல பகுதிகளிலும் இன்றும் நுகர்வோர் எரிவாயுவுக்காக வரிசையில் நிற்கின்றனர்.
தர்கா நகரில் உள்ள எரிவாயு விற்பனை நிலையத்திற்கு அருகில் கேஸ் கிடைக்குமென எதிர்பார்த்து மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்த மக்கள் மத்துகம - அளுத்கம வீதியை தர்கா டவுன் பகுதியில் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று எரிவாயு வழங்குவதாக உறுதியளித்த போதிலும் எரிவாயு விற்பனை நிலையம் திறக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது.
Post a Comment